முதல்நாளே இணையத்தில் பைரவா... அதிர்ச்சியில் படக்குழு

வெள்ளி, 13 ஜனவரி 2017 (18:26 IST)
நேற்று வெளியான விஜய்யின் பைரவா திரைப்படம் நேற்றே சில இணையதளங்களில் வெளியாகி பைரவா படக்குழுவுக்கு பயங்கர அதிர்ச்சி அளித்துள்ளது.


 
 
தமிழ்ப் படங்களுக்கு திருட்டு டிவிடிதான் வில்லனாக இருந்தது. இப்போது இணையதளமும் புதிய வில்லனாக முளைத்திருக்கிறது. படங்கள் வெளியான அன்றே இணையத்திலும் சில விஷமிகள் படங்களை பதிவேற்றிவிடுகின்றனர்.
 
பைரவா படம் நேற்று வெளியான சில மணி நேரங்களில் இணையத்திலும் வெளியிடப்பட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இணையத்திலிருந்து படத்தை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சைபர் க்ரைமிலும் புகார் தர உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்