புடவையில் ஹோம்லியாக அனிகா… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (09:39 IST)
என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்த பேபி அனிகாவின் புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

இந்நிலையில் தினசரி எதாவது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபகாலமாக மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா இப்போது புடவையில் ஹோம்லியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்