பாகுபலி-2 டிரெய்லர் நேற்று காலை ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. இணையத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காலையிலேயே தெலுங்கு பதிவு ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. எனவே, வேறு வழியில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், கூறிய நேரத்திற்கு முன்பாகவே ட்ரெய்லர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இப்படத்தின் டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பல சினிமா ரசிகர்கள் இதனை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், பாகுபலி-2 ட்ரெய்லர் வீடியோ வெளியான 5 மணி நேரத்திலேயே யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இதற்கு முன்பு, ரஜினி நடிப்பில் வெளியான கபாலி பட டீசர் வெளியான 22 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்ததுதான் சாதனையாக இருந்தது. அதை 5 மணி நேரத்தில் முறியடித்து பாகுபலி-2 டிரெய்லர் வீடியோ முறியடித்துள்ளது.