பாகுபலி-2 படப்பிடிப்பு முடிந்தது - ராஜமௌலி தகவல்

சனி, 7 ஜனவரி 2017 (09:44 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி-2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.


 

 
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம் பாகுபலி. அதன் பின் அப்படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
 
இந்நிலையில்,  இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி இப்படத்தி படப்பிடிப்பு முடிந்தது என்பதை, தேங்காய், பூசணிக்காய் படத்தை போட்டு உணர்த்தியுள்ளார். 


 
பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைப்பது ஒரு சம்பிராதயமாகும். எனவே அந்த படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் போட்டு உணர்த்தியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்