விஜய் தொலைக்காட்சி பல திறமையுள்ள நபர்களை வளர்த்துவிட்டு பெருமை சேர்த்திருக்கிறது. சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தை சேர்ந்த கலக்கபோது யாரு தீனா , பாலா , நிஷா போன்ற பல திறமைசாலிகளை பிரபலமாகியுள்ளது.
இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருவது குறித்து பதிவிட்டுள்ள புகழ், ஆகஸ்ட் 16th 1947 படத்திற்கு நல்ல விமர்சனங்களை மக்கள் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்துவரும் மக்கள், பத்திரிக்கையாளர் நண்பர்கள், மற்றும் படத்தை பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.