நவம்பர் 9 - இயக்குநர் அட்லி, பிரியா திருமணம்

செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (11:44 IST)
ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லிக்கும் சின்னத்திரை நடிகை பிரியாவுக்கும் வரும் நவம்பர் 9 -ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஷங்கரின் உதவியாளரான அட்லி இயக்கிய முதல் படம் ராஜா ராணி. படம் ஹிட். இவரும் சின்னத்திரை நடிகையான பிரியாவும் காதலித்து வந்தனர். பிரியா சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்துள்ளார்.
 
இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.
 
நவம்பர் 9 இவர்களின் திருமணம் சென்னையில் நடக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்