தெறி, மெர்சல் ஆகிய இரண்டு விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, மீண்டும் விஜய் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது. ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன
தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே வேற சில படங்களின் காப்பி என சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதால் அதிருப்தி அடைந்த விஜய், இனிமேல் அட்லி இயக்கத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்ததாகவும், எனவே விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் அட்லி, குறித்த நேரத்தில் குறித்த பட்ஜெட்டில் படத்தை எடுக்க மாட்டார் என்பதும் முதல் இரண்டு படங்களில் இருந்து தெரிய வந்துள்ளதால் அவர் இயக்கும் படத்தை தயாரிப்பதில்லை என்று பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது