அட்லி & ஷாருக் படத்தில் ஒப்பந்தமான நயன்தாரா!

வியாழன், 22 ஜூலை 2021 (17:20 IST)
இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கும் இந்தி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார். 

இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நயன்தாரா பாலிவுட்டில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்ததால் இது வெறும் வதந்தியாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால் நடிப்பை விட்டு விலகி இருந்த நயன்தாராவை எப்படி அட்லி சம்மதிக்க வைத்து ராஜா ராணி படத்தில் நடிக்க வைத்தாரோ, அது போல இந்த முடிவையும் மாற்ற வைத்து இப்போது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்