தியேட்டர் வேணாம்.. ஓடிடி போவோம்! – தனுஷின் “அத்ரங்கி ரே” பட ரிலீஸில் மாற்றம்?

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (14:56 IST)
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள இந்தி படமான அத்ரங்கி ரே ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி இயக்குனர் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2013ல் வெளியான இந்தி படம் ராஞ்சனா. இந்த படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த எல் ராயுடன் இணைந்து அத்ரங்கி ரே படத்தை நடித்துள்ளார்.

இந்த படத்தில் தனுஷுடன் சாரா அலி கான், அக்‌ஷய் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேட்டி ஒன்றில் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை வாங்கிய நெட்ப்ளிக்ஸ் இந்த படத்தையும் வாங்கி வெளியிட பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்