இரண்டு பாடல் காட்சிகள் முடிந்தால் விஎஸ்ஓபி தயாராகிவிடும்

புதன், 27 மே 2015 (15:23 IST)
ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்துவரும் ராஜேஷின், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (சுருக்கமாக விஎஸ்ஓபி) இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பேட்ச் வொர்க்கை ஒருவாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
விஎஸ்ஓபியின் டாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே இனி எடுக்கப்பட வேண்டும். பாடல் காட்சிக்கு முன், பேட்ச் வொர்க்கை ஒருவாரத்தில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தப் படத்தில் பானு, வெண்ணிறஆடை மூர்த்தி, ரேணுகா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு, டி.இமான் இசை. ஆர்யாவின், தி ஷோ பீப்பிள் படத்தை தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்