சமீபத்தில் சந்தானம் ஒரு ரியல் எஸ்டேட் அதிபருடன் நடந்த மோதலில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞரை தாக்கினார் என்பது அறிந்ததே. சந்தானம் அடித்ததால் மூக்கு, முகத்தில் காயம் ஏற்பட்ட வழக்கறிஞர் இன்னும் சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் ஜாமீன் பெற்ற சந்தானம் இன்று தான் நடித்த 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்யா,' சந்தானம் நிஜமான ஆக்சன் ஹீரோ என்பது நிரூபித்துவிட்டார். அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில் காயம் என்றால் அடிவாங்கிய அவருக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கும்' என்று பேசியதும் விழா மேடையே கலகலப்பானது.