மகாமுனி திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் விருதைப் பெறும ஆர்யா!

திங்கள், 6 டிசம்பர் 2021 (10:50 IST)
ஆர்யா நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் ரிலீஸின் போது மிகப்பெரிய கவனத்தை பெறவில்லை.

மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் நடைபெற்ற அயோத்யா திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஆர்யா பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்