திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் பிரபல நடிகருமான அருள்நிதி 'மெளனகுரு', நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' டிமாண்டி காலனி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அருள்நிதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு படக்குழுவினர் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற டைட்டிலை வைத்துள்ளனர். அரவிந்த்சிங் ஒளிப்பதிவில், சான் லேகேஷ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது.