விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு

புதன், 17 நவம்பர் 2021 (20:52 IST)
விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த அர்ஜூன் சம்பத் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில், இவர் விமான நிலையத்திற்கு சென்றபோது, அங்கு நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் வந்து உதைத்ததாகக் கூறப்பட்டது. இது அங்குள்ளவர்களால் வீடியோவகப் பதிவு செய்யப்பட்டதால் உடனே இணையதளத்தில் வைரல் ஆனது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை தாக்கியவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாகவும், பசும்பொன் முத்துராமலிங்கத்தை எதிர்த்து பேசியதாலும் அவரை தாக்கியதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ‘தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ஒரு உதைக்கு 1001 வழங்கப்படும்’ என சர்ச்சைக்குரிய டிவீட்டைப் பகிர்ந்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

கோவை மாவட்டம் கடை வீதியில் உள்ள காவல்நிலையத்தில் இந்து மக்கள் கட்சி தமிழக்த்தின் நிறுவனம் அர்ஜூன் சம்பத் மீது போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்து 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்