தந்தையின் பாடலுக்கு டான்ஸ் ஆடிக் கலக்கிய வாரிசு –இணையத்தில் பரவும் வீடியோ!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (13:43 IST)
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ரிதம் படத்தின் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார். ஆனாலும் விதிவிலக்காக சில படங்கள் உண்டு. அப்படி அவர் நடித்த மென்மையான கதையம்சம் கொண்ட படங்களில் ஒன்றுதான் ரிதம். இந்த படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் பஞ்ச பூதங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டன.

அதில் அர்ஜுனும் ஜோதிகாவும் நடனமாடும் பாடல் காற்றே என் வாசல் வந்தாய். மிகப்பெரிய ஹிட் ஆன அந்த பாடலுக்கு இப்போது அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பட்டத்து யானை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்