தொழிலதிபர் ஆனார் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள்!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:28 IST)
தொழிலதிபர் ஆனார் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள்!
பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் தொழிலதிபர் ஆகிவிட்டது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் விஷால் நடித்த பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா தொழிலதிபர் ஆகியுள்ளார். உலகிலேயே முதல்முறையாக பழத் தோல்களின் மூலம் ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிலைத்தான் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 இந்த நிலையில் அஞ்சனாவின் பிசினஸ் தொடக்கவிழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்