அறிவழகன், அருண் விஜய் இணையும் குற்றம் 23

வெள்ளி, 13 மே 2016 (10:45 IST)
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு குற்றம் 23 என பெயர் வைத்துள்ளனர். 


 
 
ஆறாது சினம் படத்தைத் தொடர்ந்து மீண்டுமொரு த்ரில்லர் கதையை அறிவழகன் இயக்கி வருகிறார். அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. படத்தின் பெயரை இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பார் என கூறியிருந்தனர். 
 
அதன்படி நேற்று படத்தின் பெயரையும், பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெங்கட்பிரபு வெளியிட்டார். 
 
மெடிக்கல் த்ரில்லராக தயாராகிவரும் இந்தப் படத்துக்கு குற்றம் 23 என பெயர் வைத்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்