ஜோவிகாவுக்கு நன்றி கூறும் அர்ச்சனா ஆர்மிகள்.. என்ன காரணம் தெரியுமா?

Mahendran

வியாழன், 11 ஜனவரி 2024 (17:44 IST)
பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஜோவிகா வந்த பிறகு அர்ச்சனாவுக்கு வாக்குகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அர்ச்சனா ஆர்மியை சேர்ந்தவர்கள் ஜோவிகாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்  
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் போட்டியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ரீஎன்ட்ரியாகி வருகின்றனர் குறிப்பாக ஜோவிகா  வந்த பின்னர் அவர் அர்ச்சனாவுக்கு எதிராக மாயா உள்பட அனைவரிடமும் பேசி வருவது  பார்வையாளர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. 
 
மனது முழுவதும் வன்மத்தை கொண்டு வந்துள்ள ஜோவிகாவை பார்வையாளர்கள் திட்டி வருகின்றனர். இதனால் ஜோவிகா மீது உள்ள ஆத்திரத்தின் காரணமாக பலர் அர்ச்சனாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதோடு வாக்குகளையும் அளித்து வருகின்றனர். 
 
அர்ச்சனாவுக்கு ஏற்கனவே அதிக வாக்குகள் கிடைத்து வரும் நிலையில் தற்போது ஜோவிகா எண்ட்ரியால் கூடுதலாக வாக்குகள் கிடைத்து வருவதாகவும் இதனால் ஜோவிகா வருகைக்கு  அர்ச்சனா ஆர்மிகள் தங்களது நன்றியை தெரிவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்