தற்கிடையில் கடந்த வருடம் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து இவருக்கு இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. பின்னர் கடந்த டிசம்பர் 28ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அவரது குழந்தையின் பெயர் சூட்டு விழா விஜய் டிவியில் நடைபெற்றது.
சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து ஒருபோதும் சலித்துப்போக மாட்டார். கணவரை கலாய்த்து மாமியார் மாமனாருடன் ஜாலியாக சேட்டை செய்யும் நிஷா தற்போது தனது கணவருடன் இணைந்து வீட்டில் இருந்தபடியே உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பாட்டி வைத்தியமும், அதன் முக்கியத்துவத்தை பற்றியும் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். பலருக்கும் உபயோகமான இந்த டிப்ஸ் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.