அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இறுதிப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இருவருமே உறவுக்காரர்களாக இருந்தாலும், நீண்ட நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்புக்காக காத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.
விஜய், ஏ.ஆர். ரகுமான் ஆகியோரின் சினிமா பயணத்தில் 25 வருடத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர்களது 25வது வருடத்திற்கு நிறைய பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். பயங்கர எதிர்ப்பார்ப்பில் இருந்த பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக சொன்ன தேதியில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் தற்போது கலக்கி வருகிறது.