அப்பா படத்தில் அம்மாவான நடிகை வரலட்சுமி!

திங்கள், 27 மார்ச் 2017 (15:09 IST)
நடிகை வரலட்சுமி மலையாளத்தில் கஸாபா என்ற ஒரு படத்தில் மம்முட்டியோடு நடித்தார். இதில் தாதா கேரக்டர் தான். மலையாளத்தில் நல்ல பேர் பெற்றுத்தந்த அந்தப்படத்துக்கு பின்னர், மலையாளத்தில் படவாய்ப்புகள் வந்து கொண்டு
 
இருக்கின்றன.

 
 
சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த படம் அப்பா. இதில் அப்பாவாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இந்நிலையில்  அவர் அப்பா படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். சமுத்திரக்கனி இயக்கும் முதல் மலையாள படமான இதற்கு ஆகாச  மிட்டாய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறது. ஜெயராம் ஹீரோவாக நடிக்க, வரலட்சுமி அவர் மனைவியாக நடிக்க உள்ள அந்த படத்தின் தொடக்க விழா நடந்துள்ளது. தமிழில் அப்பா படத்தில், சமுத்திரக்கனி தான் ஹீரோ.  ஹீரோயினுக்கு கொஞ்சம் தான் ரோல். வரலட்சுமி ஒப்பந்தம் ஆகி இருப்பதால், ஹீரோயின் கதாபாத்திரம் கொஞ்சம் அதிகமாகலாம்  என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்