பல வருடங்களாக அரசியலுக்கு எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து விட்டார். அவருக்கு முன்பே யாருமே எதிர்பார்க்காத கமலும் அரசியலுக்கு வந்துவிட்டார். எனவே, பிரபலங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்ததைப் பற்றி கருத்து கேட்டு வருகின்றனர் மீடியாக்காரர்கள்.
அப்படி, ரஜினி - கமல் இருவரும் அரசியலுக்கு வந்தது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. “இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ இல்லை. ஆனாலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.