நடிகைகள் பழங்கள் மாதிரி - தத்துவத்தை ஜுஸ் பிழியும் அனுஷ்கா

செவ்வாய், 16 டிசம்பர் 2014 (10:33 IST)
சமீபத்தில் ஹைதராபாத்தில் பேட்டிளியத்த அனுஷ்காவின் பேச்சில் தத்துவத்தின் மணம் கொஞ்சம் அதிகம். அப்படி என்ன சொன்னார்? நீங்களே படித்துப் பாருங்களேன்.
 
சீசனில் கிடைக்கும் பழங்கள் மாதிரி தான் நடிகைகள். ஒரு சீசனில் ஒரு நடிகையின் படம் ஜெயிக்கும். வேறு சீசனில் இன்னொரு நடிகை படம் ஜெயித்து விடும். என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை. இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்கிறேன். 
 
சில படங்களில் கவர்ச்சியாகவும் வேறு சில படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும் நடிக்கிறேன். டைரக்டர்கள் சொல்லி கொடுக்கிறபடி நடிக்கிறேன். படங்களின் வெற்றிக்கு தனி நபர் காரணம் அல்ல. புது கூட்டு முயற்சி ஆகும்.
 
முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் எல்லாம் ஆசை கிடையாது வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். சாவித்திரி, வாணிஸ்ரீ, ஜெயசுதா, ஜெயப்பிரதா போன்ற நடிகைகளை இன்றைக்கு உள்ள 14 வயது பசங்ககூட அடையாளம் கண்டு கொள்கிறார்கள். 
 
அவர்களைப் போல அடுத்த தலைமுறையும் அடையாளம் காணும் நடிகையாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார் அனுஷ்கா.
 
அழகிகளின் ஆசையை ஆண்டவன் எப்போதும் நிறைவேற்றாமல் இருந்ததில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்