முதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா - இணையத்தில் வைரல்!

திங்கள், 24 ஜனவரி 2022 (15:29 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து காதலில் விழுந்தார். அதையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் 2017 ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். 
 
இவருக்கு வமிகா என்ற பெண் குழந்தை இருக்குறார். மகள் பிறந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவரது முகத்தை உலகிற்கு காட்டவில்லை. இந்நிலையில்  நேற்று குழந்தையுடன் கிரிக்கெட் மைதானத்திற்கு அனுஷ்கா வந்தபோது அவர்களை அறியாமல் ரசிகர்கள் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. வமிக்க அனுஷ்காவை போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்