ரொம்ப நாளைக்கு பிறகு அனுஷ்கா ட்வீட்… அதுவும் புதுப் படத்தை பாராட்டி!

திங்கள், 17 அக்டோபர் 2022 (15:21 IST)
நடிகை அனுஷ்கா சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. விரைவில் அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அனுஷ்கா சமீபத்தில் வெளியாகியுள்ள காந்தாரா திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். காந்தாரா திரைப்படம் கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பல மொழிகளில் டப் ஆகி இப்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை முழுவதும் ரசித்ததாகவும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டுமென்றும் அனுஷ்கா ட்வீட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்