பெட்ரோல் பங்கில் வேலை செய்த அனுஷ்கா

செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:18 IST)
ஜெமினி தொலைக்காட்சியில் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும்‘மீமு சைதம்’ என்ற நிகழ்ச்சிக்காக நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்தார். 

 
‘மீமு சைதம்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியிடுவது வழக்கம். வெவ்வேறு பணிகளை செய்து அதன் முலம் பணம் ஈட்டி அதை சமூகப் பணிகளுக்காகச் செலவு செய்வதற்காக போட்டி நடத்தபடுகிறது.
 
எற்கனவே இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு, ராணா, ரகுல், நாணி, ராஷி, லாவண்யா, என பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 2-ஆம் பாகத்தில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்டார். இதற்காக ஹைதராபத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்புபவராகப் பணியாற்றியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.   
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்