பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்

செவ்வாய், 16 டிசம்பர் 2014 (11:51 IST)
சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. 
 
அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர் முனைவர் செல்வின்குமார், நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நா.முத்துக்குமார் வாங்கும் இரண்டாவது டாக்டர் பட்டம் இது. 
 
2006 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு ‘தங்கமீன்கள்’ படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்