தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் அஞ்சலி

செவ்வாய், 28 ஜூலை 2015 (15:36 IST)
அஞ்சலிக்கு நடிகையாக முகவரி தந்த படங்களில் ஒன்று, ராமின், கற்றது தமிழ். அந்தப் படம், நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை அஞ்சலிக்குப் பெற்றுத் தந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடிக்கிறார்.
தற்போது ராம், தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி சின்ன வேடம் ஒன்றில் நடிக்கிறார். சின்ன வேடம் என்றாலும் முக்கியமான வேடம் என்றார், ராம்.
 
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.
 
அஞ்சலி நடித்துள்ள சகலகலா வல்லவன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதுதவிர விமலுடன் மாப்ள சிங்கம், கார்த்திக் சுப்பாராஜ; இயக்கத்தில் இறைவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்