இந்தியன் 2 இசையமைப்பு… ரஹ்மான் இசையைப் பயன்படுத்த போகும் அனிருத்!

செவ்வாய், 7 மார்ச் 2023 (15:57 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதல் பாகத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, பாடல்கள் மற்றும் பின்னணி இசை எல்லாம் ஹிட்டானது. இரண்டாம் பாகத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் முதல் பாகத்தின் சில இசைத் துணுக்குகளை அனிருத் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஷங்கர், ரஹ்மானிடம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்