'மீ டு' மூலம் பெண்கள் பாலியல் புகார்: அனிருத் ஆதரவு

ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:52 IST)

'மீ டு' ஹேஸ்டாக் மூலம் டுவிட்டரில் பெண்கள் பாலியல் புகார்கள் கூறுவதற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
 

இது குறித்து அவர், "மீ டூ இயக்கம் நல்ல விஷயம்தான். பெண்கள் ஓபனாக சொல்கிறார்கள். வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கு நிரூபிக்கப்பட்டால் உண்மை முகம் வெளிவரும்" என கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு பெண்களை ஆபாசமாக சித்தரித்து பீப் பாடல் பாடியதாக எழுந்த சர்ச்சையில் இசையமைப்பாளர் அனிருத்தும் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்