சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, சினிமாவிலும் அதிகமான தொடர்புகள் வேண்டாம்… தெரிந்த ஒருசிலரை மட்டுமே வைத்து காலத்தை ஓட்டலாம் என நினைக்கிறார் அஜித். அதனால் தான், அடுத்தடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்கு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், சிவாவுக்குப் பிறகு இணைந்திருப்பவர் அனிருத்.
சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் அஜித்தின் நட்பு வட்டத்துக்குள் நுழைந்தவர் அனிருத். அவர் இசையமைத்த ‘ஆலுமா டோலுமா’ பாடல், இப்போதும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பேவரிட்டாக இருக்கிறது. இரண்டாவது முறையாக ‘விவேகம்’ படத்திலும் இணைந்தவர்கள், தற்போது மூன்றாவது முறையாகவும் இணைய இருக்கின்றனர்.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதும் சிவா தான் என உறுதியாகத் தெரிந்துவிட்டது. தற்போது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் அஜித், மூன்று மாதங்களுக்கு இப்படியே தான் கட்டாய ஓய்வில் இருந்தாக வேண்டும். அதற்குள் கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டாராம் அஜித். அந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.