மோகன்லால் படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா

செவ்வாய், 31 மார்ச் 2015 (11:50 IST)
அன்னாயும் ரசூலும் படத்துக்குப் பிறகு மலையாளத்திலிருந்து வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் அதிக கவனம் செலுத்தாமலிருந்தார் ஆண்ட்ரியா. இப்போது மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 

 
பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லோஹம் படத்தில் ஆண்ட்ரியா நாயகி. இரண்டாவது நாயகியாக மைதிலி நடிக்கிறார்.
 
ரஞ்சித்தின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த, ஸ்பிரிட் கேரளாவில் வெற்றிகரமாக ஓடியது என்பதால் லோஹம் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்