’அந்தகன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

வியாழன், 26 மே 2022 (21:37 IST)
நீண்ட இடைவேளைக்கு பின்னர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே
 
பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்துள்ள இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், வனிதா, கார்த்திக், யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், உத்தரா மேனன், ஊர்வசி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்