சரித்திரத்தை மறந்து விட்டோம்: ‘பொன்னியின் செல்வன்’ குறித்து ஆனந்த் மஹிந்திரா டுவிட்
வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:27 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவு செய்து உள்ளார்
சோழ பேரரசின் சாதனைகள், பலம், தொழில்நுட்பம் ஆகியவற்றை நாம் முழுமையாக உள்வாங்க வில்லை என்றே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்
உலக அளவில் நமது சரித்திரத்தை கொண்டுசெல்ல தவறியதால் தஞ்சை பெரிய கோவிலுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் சரித்திரத்தை நாம் மறந்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை படித்த அளவுக்கு சோழப் பேரரசின் சாம்ராஜ்யத்தை படிக்கவில்லை என்பது பெரும் வருத்தமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.