துரை செந்தில்குமார், தனுஷ் இரண்டாவது முறையாக சேரும் இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார்.
நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து தற்போது இந்தப் படத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தின் ஹீரோ நவீன் சந்திரா தனுஷிற்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிரம்மன் படத்தில் சிவக்குமாருக்கு நண்பராக நடித்தவர். மேலும், அவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.