மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பாத் டப் முழுக்க பூக்களை நிரப்பி வைத்து அதில் பூக்களோடு பூவாக படுத்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார். இந்த போட்டோ சமூகவலைத்தங்கள் முழுக்க வைரலாகி வருகிறது,