ஆனால், நடந்ததோ வேறு.. அவர்களின் படங்களோடு பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவான ‘தங்கல்’ திரைப்படமும் வெளியானது. மல்யுத்த போட்டியில் வெற்றி பெற முடியாத ஒருவன், தன்னுடைய பெண் குழந்தைகளை எப்படி மல்யுத்த வீராங்கனையாக மாற்றுகிறார் என்பதுதான் அப்படத்தின் கதை.
இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படம் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் விஷால் மற்றும் சசிகுமாரின் படங்கள் திணறி வருகின்றன.
எனவே, சென்னையில் உள்ள தியேட்டர் அதிபர்கள் கத்திச்சண்டை, பலே வெள்ளையத் தேவா’ ஆகிய படங்களை தூக்கிவிட்டு தங்கல் படத்தை திரையிட்டு வருகின்றனர். இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.