தமிழகத்தில் மட்டும் ரூபாய் 26 கோடியும் உலகம் முழுவதும் ரூபாய் 55 கோடியும் இந்த படம் முதல்நாளில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா இங்கிலாந்து கனடா ஐரோப்பிய ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
குறிப்பாக அமெரிக்காவில் ஆட்சி மாற்றம், அதிகரித்துவரும் கொரோனா சர்ச்சை உள்பட பல பிரச்சனைகள் இருந்த நிலையில் பல மாகாணங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கவில்லை. இருப்பினும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பகுதிகளில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை திரையிட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து படத்தைப் பார்த்ததாகவும் அங்கிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனை அடுத்து மாஸ்டர் படக்குழுவினரை பாராட்டி அமெரிக்க திரையரங்க உரிமையாளர்கள் சார்ப்பில் இமெயில் ஒன்றை படக்குழுவினர்களுக்கு அனுப்பி உள்ளனர் இந்த கடினமான காலகட்டத்திலும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கும் அளவுக்கு படமெடுத்த மாஸ்டர் படக்குழுவினருக்கு நன்றி என்று அதில் குறிப்பிட்டுள்ளனர் இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது