ஆம், அமீர் பாவினியை பிக்பாஸில் பார்த்ததில் இருந்தே அதிகமாக காதலித்து வந்தார். அதை வெளியாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் இவரது காதல் தொடர்ந்து. பின்னர் பாவினியும் ஏற்றுக்கொண்டு இருவரும் காதலித்து சூப்பர் கியூட் ஜோடியாக வளம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் எப்போது நீங்க திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, தயக்கம் காட்டாமல் பதில் சொன்ன பாவினி, எனக்கு விரைவில் திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசை அதற்காக காத்திருக்கிறேன் என கூறினார்.
உடனே அமீர், நிச்சயம் நங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம். அதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும். ஏனென்றால் நாங்கள் இருவருமே சினிமா துறையில் நிறைய சாதிக்கவேண்டும். அதற்கான நேரம் தான் இந்த ஒரு வருடம் என கூறினார்.