எந்திரன் 2 குறித்த பேச்சுகள் சமீபமாக வலுவடைந்துள்ளன. ரஜினியே எந்திரன் 2 வில் நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியானது. சண்டைக் காட்சிகளில் ரஜினி இப்போதிருக்கும் நிலையில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் எந்திரன் 2 வில் அவர் நடிப்பது சந்தேகம் என பிறகு கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்குப் பதில் அஜீத், விஜய் இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என மீடியா சொந்தமாக ஹாஸ்யம் எழுதியது.