தனுஷின் மாறன் படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனர்!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:06 IST)
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்துக்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான  காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அமீர் இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். அதை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்களாம். ஏற்கனவே அமீர் தனுஷோடு வடசென்னை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்