தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். அண்மையில் இவரது நடிப்பில் ராச்சசன் படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து , ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டில் பஞ்சாபி பெண்ணாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும், அதோ அந்த பறவை போல என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காடுகளைச் சுற்றிலும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்வதாக படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். கலைஞர்களின் மொழிப் பிரச்சனை, படப்பிடிப்பு சூழுலை கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை.
ஆடை படத்தில் நேரடி இசை. கள இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி என படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு தேவை என்பது சவாலான ஒன்று. சவாலை ஏற்றுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.