குட்டி டவுசரில் வானத்தை நோக்கி பாயும் அமலா பால் - வைரலாகும் நான் கடவுள் போஸ்!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (13:08 IST)
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, தலைவா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கிரீடம், தெய்வத்திருமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை திடீரென திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி பெரும் பராபரை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தனக்கு திருமணம் நடக்கவில்லை இது வெறும் வதந்தி. கூடிய விரைவில் என் திருமண செய்தியை நானே அறிவிப்பேன் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமலா பால்.


இதையடுத்து கடந்த சில தினங்களாக "உனக்கு நீ மட்டும் தான் பெஸ்ட். ஹீரோ, ஹீரோயின், தோழி, சோல் மேட் எல்லாமே உனக்கு நீ மட்டும் தான். தனக்குத் தான் மட்டும் தான் தான். என்றெல்லாம் பதிவிட்டு கருத்து மழை பொழுது வருகிறார். இந்நிலையில் தற்போது அதிகாலையில் கடற்கரை ஓரத்தில் குட்டி ஷார்ட்ஸ் , உள்ளாடை அணிந்து தலைகீழாக நான் கடவுள் ஆர்யா ஸ்டைலில் யோகாசனம் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தத்துவ மழை பொழிந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்