இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆன நிலையில் அமலா பாலும் மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.
இதற்கிடையில் யாருக்கும் சொல்லாமல் திடீரென திருமணம் செய்துள்ளார் அமலா பால். நேற்று கல்யாண புகைப்படங்களை பாவ்னிந்தர் சிங் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். ஆனால், வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே புகைப்படங்களை டெலீட் செய்ததுடன் இன்ஸ்டா பக்கத்தையே அவர் நீக்கிவிட்டார். காரணம், அமலா பாலுக்கு தெரியாமல் பாவ்னிந்தர் சிங் திருமண போட்டோக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனை ரகசியமாக வைத்திருக்க சொன்ன அமலா பால் கண்டித்ததால் புகைப்படங்களை நீக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கியுள்ளார் பாவ்னிந்தர் .