”நான் இன்னும் அவரை காதலிக்கிறேன்” அமலா பால் உருக்கம்!!
செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:37 IST)
இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இளம் வயதில் திருமணம் செய்தது தவறு. திருமணத் தோல்வியால் நான் உடைந்துபோகவில்லை, அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வருகிறேன்.
மேலும், இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன். எப்போதும் அந்தக் காதல் இருக்கும். அவர் எப்போதும் எனக்கு தனிச்சிறந்த மனிதர். அதேநேரம், பிரிவதும் காதல் தான். யாரும் பிரிவதற்காகத் திருமணம் செய்யமாட்டார்கள் என்று அமலா பால் கூறியுள்ளார்.