சுலோவீனியாவில் அஜித்துடன் நடிக்கப் போறேன்...

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (11:08 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக சுலோவீனியா சென்றுள்ளார் காஜல் அகர்வால்.


 
 
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் 90 சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது. 
 
முதல்கட்டப் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கும் என்றனர். ஆனால், இத்தாலி, ஆஸ்திரியாவுக்கு பக்கத்தில் இருக்கு சுலோவீனியா என்ற நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
 
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காஜல் அகர்வால், சுலோவீனியாவில் தனது புதிய படம் அஜித் மற்றும் பிற நடிகர்களுடன் தொடங்கியிருப்பதாகவும், புதிய ஆரம்பத்தை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்