அஜித்தை இயக்க ஆசைப்படும் ‘பிரேமம்’ இயக்குநர்

வெள்ளி, 19 மே 2017 (11:20 IST)
‘பிரேமம்’ படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்ரனுக்கு, அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.



நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் ‘பிரேமம்’ மலையாளப் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்தப் படம், சென்னையிலேயே 225 நாட்கள் ஓடியது. அவருடைய முதல் படமான ‘நேரம்’, தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸானது. அந்தப் படம் ரிலீஸாகி 4 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்நிலையில், ‘எங்க அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவீர்களா?’ என அஜித் ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்ரனிடம் சமூக வலைதளத்தில் கேட்டுள்ளார். “சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பருடன் ‘தல’ அஜித் வீட்டு வாசலில், அவரைப் பார்ப்பதற்காக மூன்று மணி நேரம் காத்துக் கிடந்திருக்கிறோம். ஆனால், இன்றுவரை அவரை நேரில் பார்க்க முடியவில்லை. ஒரு நல்ல படத்துக்காகத்தான் இந்தக் காத்திருப்பு என நினைக்கிறேன். அவருடன் இணையும் நேரத்திற்காக காத்திருக்கிறேன்” என அந்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்