புஷ்பா 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

புதன், 8 மார்ச் 2023 (10:12 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சாய்பல்லவி, நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக 10 நாட்கள் சாய்பல்லவி தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்