ரசிகரின் தந்தை சிகிச்சைக்கு உதவிய அல்லு அர்ஜூன்

சனி, 11 பிப்ரவரி 2023 (22:29 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா.

இப்படத்தை அடுத்து, புஷ்பா 2 படத்தில் சுகுமார் இயக்கத்தில் தற்போது அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார்.

முதல் பாகம் ரூ.350 கோடி வசூலித்த நிலையில், இப்படமும் அதிக வசூல் குவிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் ரசிகர் மன்றம் சார்பில், அவரது ரசிகரின் தந்தை நுரையீரல் தொடர்பான  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெறுவதாகவும், இதற்காக ரூ.  2 லட்சம் தேவைப்படுவதாக கூறினர்.

இதைப் பார்த்த அல்லு அர்ஜூன், தன் குழுவினர் மூலம் உதவி செய்துள்ளார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் நன்றி கூறி, பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்