பத்திரிகையாளர்களை திட்டி தீர்த்த அக்சரஹாசன். பெரும் பரபரப்பு

செவ்வாய், 21 மார்ச் 2017 (22:04 IST)
கமல்ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்சரஹாசன் நடித்த இந்தி படமான  ‘லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மும்பையில் நடந்தது.



 


இந்த சந்திப்பை விநியோகிஸ்தர்  சன்னி கன்னா ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த சந்திப்பின் நேரம் அதிகரித்து கொண்டே சென்றது. சொன்ன நேரத்தை விட இருமடங்கு நேரம் ஆனதால் அக்சராஹாசன் அடுத்து கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ஒன்று இருந்ததால் அவர் டென்ஷனாகியுள்ளார்.

இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்ற அவர் முயன்றார். ஆனால் விநியோகிஸ்தரும், பத்திரிகையாளர்களும் நிகழ்ச்சி முடியும் வரை இருந்துவிட்டு செல்லுமாறு கட்டாய[ப்படுத்தினர். இத்னால் ஆத்திரமடைந்த அக்சராஹாசன் விநியோகிஸ்தரையும், பத்திரிகையாளர்களையும் திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் வேறு வழியின்றி நிகழ்ச்சி முடியும் வரை அவர் இருந்துவிட்டு தான் சென்றாராம். இதனால் நிகழ்ச்சியின் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்